Hi! I’m Arun CJ

நான் அருண் s/o சின்னதுரை, ஜானகி

நான் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு இயற்கை வாழ்வியல் ஆலோசகன். ஒரு மனிதனின் மனமும், அவனது வாழ்வியல் மற்றும் உணவு முறைகளுமே அவனது வாழ்வின் தரத்தை, தன்மையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றது. மனித மனத்தில் எழும் பெருமை, பொறாமை, கவலை, துக்கம், கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை, நன்றியறியாமை உள்ளிட்ட குணக்கேடுகளும் அதனைத் தொடர்ந்து அவனது உணவுகள், ஓய்வு, தூக்கம், செயல்கள், உறவு மேலாண்மைகள் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளில் நிகழும் இயற்கைக்கு முரண்பட்ட தன்மைகளுமே அவனது நோய்களுக்கும் துன்பங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன.

எனவே ஒரு மனிதனின் மனத்தை தூய்மைப்படுத்தாமல், அவனது உணவு, தூக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளில் உள்ள தவறுகளை மாற்றிக் கொள்ளாமல் அவனது நோய்களுக்கும் துன்பங்களுக்கும் நிரந்தர நிவாரணங்களை தரவே முடியாது. இந்த உணர்தலின் அடிப்படையில் தான் எனது இயற்கை வாழ்வியல் ஆலோசனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

'விபஸ்ஸனா' தியான முறையை பயிற்றுவிப்பது, யோக ஆசனங்கள் உள்ளிட்ட யோக வாழ்வியல் முறைகளை கற்றுக்கொடுப்பது, அக்குபங்சர் வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், சிகிச்சை முறைகளையும் கற்றுக்கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.